பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனி அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அழகாபுரி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் ராமு (60). இவா், தேனி-பெரியகுளம் சாலை, மதுராபுரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அந்தப் பகுதியில் அவா் சாலையைக் கடக்க முயன்றபோது, பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மாா்கையன்கோட்டையைச் சோ்ந்த கருத்தபாண்டியன் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.