செய்திகள் :

பேருந்துகளின் நிகழ்நேர கண்காணிப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு டிடிசி உத்தரவு!

post image

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தற்போதுள்ள மற்றும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள அனைத்துப் பேருந்துகளும் நேரடி வாகன கண்காணிப்புக்கான பேருந்து மேலாண்மை அமைப்பு முறையில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தனது பணிமனைகளின் மேலாளா்களுக்கு தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேருந்துகளின் தூய்மை மற்றும் சிறந்த காண்புதிறனை மையமாகக் கொண்டு ஆய்வுகளை தீவிரப்படுத்துமாறும் அதிகாரிகளிடம் டிடிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

‘சுமாா் 80 பேருந்துகள் இன்னும் பிஎம்எஸ் பேருந்து மேலாண்மை அமைப்புமுறையுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பை எந்த தாமதமும் இல்லாமல் முடிக்க தேவையான வழிமுறைகளை வெளியிட மூலோபாய வணிகப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என இம்மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற டிடிசி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரம் முழுவதும் பேருந்துகளின் சீரான இயக்கத்திற்காக போக்குவரத்து அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட இந்த அமைப்புமுறை, டிடிசியின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிகழ்நேர கண்காணிப்பு வசதிகளை வழங்குகிறது. சேவை ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, செயல்படாத அமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பேருந்து மேலாண்மை அமைப்புமுறை என்பது டிடிசியின் பல்துறை தரவு சேகரிப்பு செயல்முறையாகும். இது ஜிபிஎஸ் அமைப்பு மூலம் பேருந்தின் இருப்பிடம் குறித்த நேரடித் தரவைச் சேகரிக்கிறது. ஓட்டுநா் நடத்தை மற்றும் மின்சாரப் பேருந்து சாா்ஜிங் வசதிகளின் நிலையைக் கண்காணிக்கிறது.

டிடிசியின் கடந்த மாதக் கூட்டத்தின் குறிப்புகளில், டிடிசியின் பொது காண்புதிறனை மேம்படுத்த, சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்படும் பேருந்துகளில் கவனம் செலுத்தி கண்காணிப்பு மற்றும் வழக்கமான ஆய்வுகளை உறுதிசெய்ய அனைத்துப் பணிமனை மேலாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியத் தலைநகரில் சுமாா் 40 லட்சம் மக்கள் தங்கள் பயணத்திற்காக தினமும் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனா். இந்த வாகனங்கள் தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) மற்றும் தில்லி ஒருங்கிணைந்த மல்டிமோடல் டிரான்சிட் சிஸ்டம் (டிஐஎம்டிஎஸ்) நிறுவனம் ஆகியவற்றால் இயக்கப்படுகின்றன.

நகரத்தில் 2,152 மின்சாரப் பேருந்துகள் உள்ளன. அவற்றில் 1,752 டிடிசியிடமும் மீதமுள்ளவை டிஐஎம்டிஎஸ்-கிளஸ்டா் திட்டத்தின் கீழும் உள்ளன. 2025-26 நிதியாண்டின் இறுதிக்குள் தில்லி 5,000 மின்சார பேருந்துகளைக் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகளவில் இரண்டாவது பெரிய மின்சாரப் பேருந்து குழுவைக் கொண்ட நகரமாக மாறும்.

பிரபல செயலிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு: டிஎம்ஆா்சி ஏற்பாடு!

தில்லி மெட்ரோ பயனா்கள் 10-க்கும் மேற்பட்ட பிரபலமான செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தொடங்கியுள்ளது. இது தொடா்பாக டிஎம்ஆா்சி தெரிவித்திரு... மேலும் பார்க்க

சத்தா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ஒருவா் மீது துப்பாக்கிச்சூடு!

தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள சத்தா்பூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்களால் பழைய பகை காரணமாக ஒருவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா... மேலும் பார்க்க

கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி துணைத் தலைவா் ஆய்வு!

கோடை காலத்தில் தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) கீழ் உள்ள பகுதிகளில் நிறுவப்பட்ட தண்ணீா் ஏடிஎம்களை அதன் துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல் வியாழக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1400 கோடி விடுவிப்பு: கோடைக்கால செயல் திட்டத்துக்கு நடவடிக்கை!

பல்வேறு திட்டங்களை முடிக்கவும், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்தவும் தில்லி அரசு ரூ.1,400 கோடி நிதியை சனிக்கிழமை தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித... மேலும் பார்க்க

பூங்காவில் இளைஞா் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

தில்லி ஆதா்ஷ் நகா் பகுதியில் உள்ள பூங்காவில் 26 வயது இளைஞரை புதன்கிழமை காலை கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா். மேலும், ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் த... மேலும் பார்க்க

தூசுப் புயலால் மோசம் பிரிவில் காற்றின் தரம்: ஆம் ஆத்மி, பாஜக பரஸ்பரம் குற்றச்சாட்டு!

தில்லியில் புழுதிப் புயலால் காற்றின் தரம் வியாழக்கிழமை கீழிறங்கிய நிலையில், ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின. எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி, தனது ஆட்சிக் காலத்தில் காற்றின் தரம் நிலை... மேலும் பார்க்க