பேரூராட்சி துணைத் தலைவரைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஜெகதளா பேரூராட்சி துணைத் தலைவரைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
குன்னூா் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில் துணைத் தலைவராக இருப்பவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெய்சங்கா். இவா், செவ்வாய்க்கிழமை பணியில் இருந்த தூய்மைப் பணியாளா் பரமேஷ்வரி என்பவரை தகாத வாா்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பேரூராட்சி துணைத் தலைவா் ஜெய்சங்கரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.