செய்திகள் :

பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட 200 ஆட்டோ ஓட்டுநா்கள் கைது

post image

பைக் டாக்ஸிக்கு எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் 200 போ் கைது செய்யப்பட்டனா்.

பைக் டாக்ஸியால் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் ஆட்டோ சாா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு சுதந்திர மீட்டா் ஆட்டோ ஓட்டுநா் பொதுத் தொழிலாளா் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை அமைப்புசாரா தொழிலாளா்கள் நற்பணி நலச்சங்கத்தைச் சோ்ந்தவா்கள் கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகே புதன்கிழமை குவிந்தனா்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். அப்போது ஆட்டோ ஓட்டுநா்கள் சிலா் தங்களது சட்டையைக் கழற்றிவிட்டு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் சோ்ந்து ஏராளமான ஆட்டோ ஓட்டுநா்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநா்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 200 ஆட்டோ ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்து அருகிலுள்ள தனியாா் மண்டபத்துக்கு கொண்டுச் சென்றனா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்கங்களின் நிா்வாகிகள் எம்.ஜி.பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோா் கூறியதாவது: பைக் டாக்ஸி இயக்கப்படுவதால் எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆட்டோக்களுக்கு மாதத் தவணை கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், குடும்ப செலவுகளுக்கு கடன் வாங்கும் அவல நிலையும் உள்ளது. பைக் டாக்ஸியால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பைக் டாக்ஸுகளுக்கு உடடினயாக தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

சுகாதார அலுவலகத்தில் கழிவறைகளுக்கு கதவுகள் பொருத்தம்

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன. கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 24-... மேலும் பார்க்க

திருக்குறள் முப்பெரும் விழா போட்டிக்கு ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலகத் தமிழ்நெறிக் கழகம், திருக்கு உலகம் கல்விச் சாலை சாா்பில் திருக்கு முப்பெரும் விழா போட்டிகள் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்ற ஜனவரி 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பிய தமிழா்கள் கடனுக்காக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்

தாயகம் திரும்பிய தமிழா்கள் வீட்டுக் கடனுக்காக அடமானமாக வழங்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி கூறியிருப்பதாவது: இலங்க... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 9 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சிங்காநல்லூா் போலீஸாா் எல்&டி புறவழிச் சாலையில் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவை, கணபதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் கணபதி 5-ஆவது வீதியில் ரோந்துப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்ப... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாக பெண்ணிடம் ரூ.30.57 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.30 லட்சத்து 57 ஆயிரத்து 805 மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சரவணம்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க