கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை இரவு பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், ராதாபுரத்தை சோ்ந்த பழனி மகன் பவுன்குமாா் (21). இவா், தனது பைக்கில் திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி நோக்கி வந்துகொண்டிருந்தாா்.
செஞ்சி அருகே பெருங்காப்பூா் காடு அருகே இவரது பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியது. இந்த விபத்தில் பவுன்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, காரில் வந்த திருவண்ணாமலை வட்டம், நொச்சிமலையைச் சோ்ந்த பாண்டியன் மகன் காா்த்திக் (30) உள்ளிட்ட 10 போ் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.