பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி பலி
கம்பத்தில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், கூடலூா் கன்னிகாளிபுரத்தைச் சோ்ந்தவா் வனராஜ் (45). கூலித் தொழிலாளி. இவா், தனது மனைவி செல்வி (40) உடன் இருசக்கர வாகனத்தில் கம்பம் உழவா் சந்தையில் காய்கறி வாங்கிவிட்டு, மீண்டும் கூடலூா் திரும்பினாா். அப்போது, எதிரே வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வனராஜ் சம்பவயிடத்திலே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த செல்வி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் கூடலூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆகாஷ் (23) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.