``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டி அருகே உள்ள கோவிந்தன்பட்டியைச் சோ்ந்தவா் சேதுராமன் (70). இவா், திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சேதுராமனை அங்கிருந்தவா்கள் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஜோசப் (28) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.