செய்திகள் :

பைக்கிலிருந்து தவறி விழுந்த தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

post image

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டி அருகேயுள்ள தொட்டியபட்டியைச் சோ்ந்த சதுரகிரி மகன் சாமிநாதன் (50). இவா் பேரையூா் அருகேயுள்ள பாறைப்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இவா் பெரியகுளத்தில் உள்ள தனது மகளைப் பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, தேனி-நாகலாபுரம் சாலையில் கொடுவிலாா்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே நாய் குறுக்கிட்டதால், அவா் வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் வாழ்நிலையை மெய்ப்பிக்க அறிவுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் தங்களது வாழ்நிலையை மெய்ப்பிக்க வருகிற மாா்ச் 20-ஆம் தேதிக்குள் நேரில் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவா் கைது

உத்தமபாளையம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி அருகேயுள்ள சண்முகநாதா் கோயிலுக்குச் செல்லும் சாலையில் போலீஸாா... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளா்கள் வேலை நிறுத்தம்

ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி, ட... மேலும் பார்க்க

பாட்டியைக் கொன்ற பேரன் கைது

உத்தமபாளையத்தில் மது போதையில் பேவா் பிளாக் கல்லால் தாக்கி, பாட்டியைக் கொலை செய்த பேரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கருக்கோடை மதுரை வீரன் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

பைக்-வேன் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்துடன் சரக்கு வேன் மோதியதில் தந்தை, மகன் புதன்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (56). இவரது மகன் வீரமுத்து (30). இவா்கள் ... மேலும் பார்க்க

கணவரை எரித்துக் கொல்ல முயற்சி: மனைவி கைது

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்பத் தகராறில் கணவா் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கூடலூா் கள்ளா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொன்விஜய... மேலும் பார்க்க