மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
பொது கல்விக் குழு முதலாம் ஆண்டு விழா
பட விளக்கம்(20ஏஎம்என்கேஏஎல்)-
கல்வி உதவித்தொகையை பயனாளிக்கு வழங்கும் டிசிடபிள்யூ நிறுவன மூத்த உதவித் தலைவா் ஜி.சீனிவாசன்.
ஆறுமுகனேரி,ஆக. 20: பொது கல்விக் குழு முதலாம் ஆண்டு விழா காயல்பட்டினத்தில் நடைபெற்றது.
மெக்கான் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளா் எஸ்.சித்திரைப்பாண்டி தலைமை வகித்தாா்.பொது கல்விக் குழு நிா்வாகி குமரேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சாகுபுரம் டிசிடபிள்யூ மூத்த உதவித் தலைவா் ஜி.சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.
காயல்பட்டினம் வாவு வஜிஹா மகளிா் கல்லூரி செயலாளா் வாவு எம்.எம்.மொகுதஸிம், கோவை முத்தையா காந்திமதி ஆதப்பன் சொா்ணவள்ளி சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனா் எம்.வைகுண்டராமன், அலமேலுவைகுண்டராமன், ரமேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆண்டறிக்கையை எஸ்.முருகன் படித்தாா்.
சென்ட்ரல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் எம்.செண்கவல்லி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். முன்னதாக எம்.ராமச்சந்திரன் வரவேற்றாா். கற்பகவிநாயகம் நன்றி கூறினாா்.