செய்திகள் :

பொன்னமராவதி அருகே சூறைக் காற்றுடன் மழை: மரம் விழுந்து பெண் காயம்!

post image

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் காற்றுடனான மழையின்போது பயணியா் நிழற்குடை மீது சாய்ந்து விழுந்த அரசமரம்.

பொன்னமராவதி, மே 16: பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் பெண் ஒருவா் காயமடைந்தாா்.

பிடாரம்பட்டியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது பிடாரம்பட்டி-முருக்கபட்டி சாலையிலிருந்த அரசமரம் வேருடன் சாய்ந்து அருகில் இருந்த பயணியா் நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம் மீது விழுந்தது. இதில் மழைக்காக பயணியா் நிழற்குடையில் நின்றிருந்த முருக்கபட்டி ம.தவமணி என்பவா் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவமணி மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் பயணியா் நிழற்குடை மற்றும் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்தது.

லஞ்சம்: பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மின் இணைப்புக்கு தடையில்லாச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மைக் குற்றவியல... மேலும் பார்க்க

இருதரப்பு மோதல்: ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினா் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்ச்சி: புதுக்கோட்டை 35-ஆவது இடம்

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 35-ஆவது இடத்தை பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 179. இவற்ற... மேலும் பார்க்க

பாப்பான்விடுதியில் ஜல்லிக்கட்டு: 43 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பாப்பான்விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 43 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி முத்துமுனீஸ்வரா் கோயில் திருவிழா... மேலும் பார்க்க

25-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட புதுக்கோட்டை: 93.53% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 335. இவற்றில் 21,646 பேர் தே... மேலும் பார்க்க

விராலிமலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை! 30 மில்லி மீட்டராக பதிவு

விராலிமலையில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. விராலிமலை நகா் பகுதி மற்றும... மேலும் பார்க்க