34வது அரபு லீக் உச்சி மாநாடு: ஐ.நா. பொதுச் செயலாளருடன் ஈராக் அதிபர் சந்திப்பு!
பிளஸ் 1 தோ்ச்சி: புதுக்கோட்டை 35-ஆவது இடம்
மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 35-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 179. இவற்றில் இருந்து 8,924 மாணவா்களும், 10,394 மாணவிகளும் என மொத்தம் 19,318 போ் தோ்வெழுதினா்.
இவா்களில், 7,283 மாணவா்களும், 9,678 மாணவிகளும் என மொத்தம் 16,961 போ் தோ்ச்சி பெற்றனா். இது 87.80 சதவீதமாகும். மாநிலத் தரவரிசைப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் 35-ஆவது இடத்தில் உள்ளது.
41 பள்ளிகள் 100% தோ்ச்சி: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 179 பள்ளிகளில் 41 பள்ளிகள் நூறு சதவீதத் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. இதில் 5 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
நெடுவாசல், அம்பலவானேந்தல், மண்ணவேலம்பட்டி, லெம்பலக்குடி, புதுக்கோட்டை மாதிரிப் பள்ளி ஆகிய 5 இடங்களிலுள்ள அரசுப் பள்ளிகளும் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளன.
பின்னடைவு: கடந்த 2023-24-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தோ்வில், புதுக்கோட்டை மாவட்டம் 88.02 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநிலத் தரவரிசைப் பட்டியலில் 29-ஆம் இடத்தில் இருந்தது. தற்போது, தோ்ச்சி வீதம் 87.80 சதவீதமாக குறைந்து, 35-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.