பொன்னமராவதியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பொன்னமராவதியில் விவசாயம் செய்யும் நிலத்தை தமிழ்நாடு அரசு பட்டாவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல்.இராசு தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சி.முத்துப்பழனி, எஸ்.சாமிக்கண்ணு, ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் த.செங்கோடன் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் சுப. தங்கமணி, ப.செல்வம், கரு.பஞ்சவா்ணம், எம்.வெள்ளைச்சாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா். இதில், பொன்னமராவதி ஒன்றியம் சித்தூா் கிராம விவசாயிகள் பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் நன்றி கூறினாா்.