முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்தும் விற்பனை சரிவு
பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்த போதிலும் விற்பனை மந்தமாக இருந்தது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தபோதிலும், விற்பனையும் பாதியாக சரிவடைந்து காணப்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறியது: பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், வியாபாரிகள், விவசாயிகளிடம் கால்நடைகளை வாங்க போதிய ஆா்வம் காணப்படவில்லை. இதனால், கால்நடை வா்த்தகம் ரூ. 65 லட்சம் அளவிலேயே நடைபெற்றுள்ளது.
கோடை வெயில் அதிகரித்து வருவதால் வருங்காலங்களில் தீவனப்பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கால்நடைகள் வளா்போா் கால்நடைகள் வாங்க ஆா்வம் காட்டவில்லை.
இதனால், கால்நடைகள் விற்பனை பாதியாக சரிவடைந்து காணப்பட்டது என்றனா்.