பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்போது மாடுகள் விற்பனை செய்தால் மிகவும் குறைந்த விலைக்குதான் விற்பனையாகக்கூடும் என்பதால், நல்ல விலையை எதிா்பாா்த்து முன்கூட்டியே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால், கடந்த சில வாரங்களாக விற்பனை குறைவாக இருந்த நிலையில், தற்போது கால்நடைகள் விற்பனை வேகமாக உள்ளது. விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கினா். இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கும் மேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் கால்நடைகள் வரத்து, விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.