ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா
குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சுமாா் 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை நிா்வாகிகள் ஆா்.எஸ்.சண்முகம், வி.ஏ.கே.குமாா், எம்.கதிரேசன், எஸ்.செந்தில்வேலன், வி.ஜி.செளந்தரராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.