லாரி மோதி ஓட்டுநா் மரணம்
வேலூா் அருகே லாரி மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தெள்ளூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44), ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை தெள்ளூா் கூட்டு ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பொள்ளாச்சியில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. எதிா்பாராத விதமாக முருகனின் இருசக்கர வாகனம் மீது அந்த லாரி மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.