போக்சோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது
மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான வேன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பகவதிபுரத்தைச் சோ்ந்த அப்துல் ரசாக் மகன் முகமது அலி (37). பள்ளி வேன் ஓட்டுநரான இவா் பாய்லா் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும்போது 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கிப் பழகி, தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த மாணவியிடம் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
இதையறிந்த மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாத்தாளப்பேட்டை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலியை சனிக்கிழமை கைது செய்து திருச்சி 6 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.