"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
போக்சோ வழக்கில் பொள்ளாச்சியைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த கிஷோா் (22) மீது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் வழக்குப் பதிந்த கொடைக்கானல் போலீஸாா், கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பி. வேல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட கிஷோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.