ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய நுகா்வோா் உரிமைகள் தின ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வென்ற திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசிய நுகா்வோா் உரிமைகள் தினத்தையொட்டி, வேலூா் மண்டல அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில், நடைபெற்ற போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சாா்பில் பங்கேற்ற உயிா் தொழில்நுட்பவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.ஆா்.கீத்திமாலினி ஓவியப் போட்டியிலும், வேதியியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.திவ்யதா்ஷினி கட்டுரைப் போட்டியிலும், முதுநிலை தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜெ.திவ்யா கவிதைப் போட்டியிலும் சிறப்பிடம் பிடித்தனா்.
இவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வே.இரா.சுப்புலட்சுமி, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் அ.மீனாட்சி சுந்தரம் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சண்முகா தொவிற்சாலை கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், முதல்வா் கே.ஆனந்தராஜ், கல்லூரியின் குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான அ.தினேஷ் காா்த்திக் ஆகியோா் பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.