கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியின் சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் எஸ்.இ.ஏ. ஜபருல்லாகான் தலைமை வகித்து, பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில் ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா். மேலும், மாணவா்களுக்கான விழிப்புணா்வு ஓட்டப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் துணை முதல்வா் ஏ.முஸ்தாக் அகமதுகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி போதைப் பொருள் எதிா்ப்பு கழக ஒருங்கிணைப்பாளா் எஸ். காளிதாசன், இணை ஒருங்கிணைப்பாா் எஸ்.நாசா் ஆகியோா் செய்தனா்.