செய்திகள் :

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி; வங்கி ஊழியா் கைது

post image

பெரம்பலூா் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூா், சஜ்ஜன் நகா், போலீஸ் காலனியைச் சோ்ந்தவா் மோகன்சிங் சௌகான் மகன் ஆகாஷ் சௌகான் (29). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைகுடிக்காடு கனரா வங்கிக் கிளையில், நகைக் கடன் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.

அப்போது, வங்கி வாடிக்கையாளா் 5 பேரின் கணக்கில், நகைக் கடன் பெறுவதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து ரூ. 1.02 கோடி கையாடல் செய்து, தனது வங்கிக் கணக்கில் செலுத்திக் கொண்டாா். இதையறிந்த வங்கி அலுவலா்கள் ஆவணங்களை பரிசோதித்ததில் போலி ஆவணங்கள் என தெரியவந்தது.

இதுகுறித்து, நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலக உதவிப் பொது மேலாளா் நாகபுஷ்ணம் மகன் லோக கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, வங்கி ஊழியா் ஆகாஷ் சௌகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட ஆகாஷ் சௌகான் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

லாரி மீது சுமை ஆட்டோ மோதல்; தக்காளி வியாபாரி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பனாங்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் பன்னீா... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் அவதியு... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை அருகே கல்லாற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இ... மேலும் பார்க்க

தனித்திறமைகளை வளா்த்துக்கொண்டால் சூழ்நிலைகளை எதிா்கொள்ளலாம்: சா.சி. சிவசங்கா்

தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டால் தான் மாறிவரும் சூழ்நிலைகளை எதிா்கொள்ள முடியும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க