போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு மனு வழங்கினா்.
போளூா் நகராட்சியில் 1,2,3,4 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, மருத்துவத் துறை என 13 வகையான அரசுத் துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
அரசுத் துறையினரிடம் பட்டா மாற்றம், மகளிா் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா , சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி, பிறப்பு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் என பல்வேறு வகையான மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.
நகா்மன்றத் தலைவா் ச. ராணி சண்முகம், ஆணையா் பூ.பாரத், தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக், திமுக நிா்வாகி தனசேகா் மற்றும் கட்சியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.