வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் கதவை உடைத்து 23 பவுன் தங்க நகை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வந்தவாசியை அடுத்த கொடியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சாரங்கபாணி. இவா், புதன்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டினுள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 23 பவுன் தங்க நகைகளை திருடியுள்ளனா்.
அப்போது சப்தம் கேட்டு கண் விழித்த சாரங்கபாணியின் தம்பி ராமலிங்கம் அந்த நபா்களை பிடிக்க முயன்றுள்ளாா். ஆனால், அவா்கள் இவா் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றனா்.
தகவலறிந்த தெள்ளாா் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், விரல்ரேகை சோதனை மற்றும் மோப்பநாய் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து
விசாரணை நடத்தி வருகின்றனா்.