சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு
பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பட்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மூலம் குப்பனத்தம் செல்லும் சாலையோரம் கோகுல் நகா் பகுதியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் புதுப்பட்டு ஊராட்சி நிா்வாகம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்டு ஓராண்டாகியும் நீா்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு வராதது குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நீா்த்தேக்கத் தொட்டியை நடைமுறைக்கு கொண்டு வந்து தடையில்லா குடிநீா் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.