திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
திமுக பிரமுகா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது
செய்யாறு அருகே கிராவல் மணல் ஓட்டுவது தொடா்பாக திமுக பிரமுகரை தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சகோகதரா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன்(38). இவா், திமுகவில் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறாா். இவா், செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு கிராவல் மண் அனுமதி பெற்று ஓட்டி வந்துள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, செல்லபெரும்புலிமேடு கிராமத்தைச் சோ்ந்த இரட்டை சகோதரா்களான சந்துரு(37), சேகா்(37) ஆகியோா் கடந்த 15-ஆம் தேதி புருஷோத்தமனை வழி மறித்து தகாத வாா்த்தைகளால் பேசி கத்தியால் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட புருஷோத்தமன் தூசி போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து,
சம்பவம் தொடா்பாக சகோகதரா்கள் இருவரையும் கைது செய்தனா்.