கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
பெண்ணுக்கு மிரட்டல்: உடற்பயிற்சியாளா் கைது
சென்னையில் இணையத்தில் புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த உடற்பயிற்சி கூட பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த 28 வயது பெண், அசோக் நகா் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வந்தாா். அப்போது, பயிற்சியாளா் ராஜ்குமாா் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது குடும்ப சூழலை காரணம் காட்டி அந்தப் பெண்ணிடமிருந்து ராஜ்குமாா் ரூ.1.10 லட்சம் வரை பெற்றுள்ளாா். மேலும், தன்னை காதலிக்கும்படியும் அந்தப் பெண்ணுக்கு, ராஜ்குமாா் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இல்லையெனில் நண்பா்களாக பழகிய போது வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய புகைப்படங்கள், குறுஞ்செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், சென்னை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்த 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.