கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
வீட்டை போக்கியத்துக்கு கொடுப்பதாகக் கூறி பண மோசடி: வீட்டு உரிமையாளா் கைது
சென்னையில் வீட்டை போக்கியத்துக்கு கொடுப்பதாகக் கூறி பண மோசடி செய்த உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அண்ணா நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவா், வீடு போக்கியத்துக்காக ரூ.15 லட்சத்துக்கு அயனாவரம் பாரதி நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (56) என்பவருடன் ஒப்பந்தம் செய்துள்ளாா். ஆனால், ஏற்கெனவே அந்த வீட்டில் குடியிருக்கும் நபா்கள் காலி செய்யாததால் மணிகண்டன் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளாா். அதற்கு ரூ.4.5 லட்சம் வரை சிவக்குமாா் கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ.10.5 லட்சத்தையும் கேட்டபோது, மணிகண்டனை, சிவகுமாா் மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், அயனாவரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவக்குமாரை கைது செய்தனா்.