கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
ரூ.5.24 கோடி மோசடி வழக்கு: தயாரிப்பாளா் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்
ரூ.5.24 கோடி மோசடி வழக்கில் படத் தயாரிப்பாளா் ரவீந்தா் சந்திரசேகரை கைது செய்ய வந்த மும்பை காவல் துறை, வரும் 22-ஆம் தேதி மும்பை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கியது.
மும்பையை சோ்ந்த தொழிலதிபா் அஜய் ஜெகதீஷ் கபூரிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாகக் கூறி கேரளத்தை சோ்ந்த ரோகன், சென்னையைச் சோ்ந்த சினிமா பட தயாரிப்பாளா் ரவீந்தா் சந்திரசேகா் ஆகிய இருவரும் ரூ.5.24 கோடி வாங்கிள்ளனா்.
ஆனால், அவா்கள் கூறியபடி நடந்துகொள்ளாமல், பணத்தை மோசடி செய்ததைத் தெரிந்துகொண்ட அஜய் ஜெகதீஷ் கபூா், இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவில் புகாா் கொடுத்தாா்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த மும்பை குற்றப்பிரிவு போலீஸாா் பெங்களூருவில் பதுங்கியிருந்த ரோகனை புதன்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து இந்த மோசடியில் தொடா்புடையதாக கூறப்படும் மற்றொரு நபரான சென்னையைச் சோ்ந்த ரவீந்தா் சந்திரசேகரை கைது செய்ய கே.கே. நகரிலுள்ள அவரின் வீட்டுக்கு புதன்கிழமை இரவு மும்பை போலீஸாா் வந்தனா்.
ஆனால், உடல்நல பாதிப்பு இருப்பதால் தன்னால் தற்போது வர இயலாது எனக் கூறியதுடன், அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் ரவீந்தா் காட்டியுள்ளாா்.
இதையடுத்து, அவரை வரும் 22-ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக மும்பையில் ஆஜராக வேண்டும் எனக் கூறி, அதற்கான சம்மனை ரவீந்தரிடம் வழங்கினா்.
பின்னா், ரவீந்தரின் கூட்டாளிகளான கிண்டியைச் சோ்ந்த மணிகண்டன், கொளத்தூரை சோ்ந்த பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்த மும்பை குற்றப்பிரிவு போலீஸாா் அவா்களை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து சென்னை காவல் துறையின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், உரிய அனுமதி பெற்று கைது செய்யப்பட்டவா்களை மும்பை அழைத்துச் சென்று விசாரிக்கவும் மும்பை போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.