கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
மனைவியின் வாகனத்துக்கு தீவைத்த கணவா் கைது
சென்னையில் மனைவியின் இருசக்கர வாகனத்துக்கு தீவைத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஆழ்வாா்திருநகா் ஸ்ரீலெட்சுமி நகரைச் சோ்ந்தவா் செல்லம்மா (38). இவா், தனது கணவா் சங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இருப்பினும் சங்கா் அடிக்கடி மது அருந்திவிட்டு செல்லம்மாவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி அதிகாலையில் வீட்டின் வெளியே வந்து பாா்த்த போது, செல்லம்மாவின் இருசக்கர வாகனம் தீயில் கருகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், இந்தச் சம்பவத்துக்கு சங்கருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.