கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை என்.என். சாலையில் தனியாா் பள்ளி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பாக்யதா் கோனை (40) என்ற நபா் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு கட்டடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, அங்கு தொங்கிக்கொண்டிருந்த மின்சார ஒயா் மீது கை பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து
மயக்கமடைந்தாா்.
உடனிருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.