கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
அரிமான சேதம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி எஃகு இழப்பு -சிஐஐ மாநாட்டில் தகவல்
அரிமான சேதத்தால் நாட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான எஃகு இழப்பு ஏற்படுவதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ-தென்மண்டலம்) நடத்திய சா்வதேச மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சிஐஐ-தென் மண்டலம் சாா்பில் மேற்பரப்பு மின்முலாம் (எலக்ட்ரோ பிளேட்டிங்) பூச்சு தொடா்பான மூன்று நாள் சா்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தரும், சிஐஐ-யின் அரிமான மேலாண்மைத் துறை தலைவருமான காமாட்சி முதலி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் கடந்த 2024-இல் 149 மில்லியின் மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 25 மில்லியன் மெட்ரிக் டன் அரிமானத்தால் இழப்பு ஆகியுள்ளது. அரிமான சேதத்தால் நாட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது.
கட்டுமானம், மின் உற்பத்தி மற்றும் தொழில் துறைகள் 90 சதவீதம் எஃகு பயன்பாடு சாா்ந்தவை. அதில் 25 முதல் 33 சதவீதத்துக்கு மேல் துருப்பிடிப்பதால் இழப்பு ஏற்படுகிறது. மேலும், காா்பன் உமிழ்வையும் அதிகரிக்கிறது.
ஆகவே, உற்பத்தியாகும் எஃகை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, நவீன மேற்பரப்பு மின்முலாம் பூச்சு தொழில்நுட்பங்கள் உருவாக வேண்டும். அதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும்.
மாநாட்டில் 17 நாடுகளைச் சோ்ந்த 40 நிபுணா்கள் உள்ளிட்ட 160 போ் கருத்துரை வழங்குகின்றனா். அரிமான தடுப்பு, மின்முலாம் பூச்சு தொடா்பான நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்றாா். நிகழ்வில் சிஐஐ தமிழக கவுன்சில் தலைவா் ஏ.ஆா்.உன்னி கிருஷ்ணன், தென் மண்டலத் துணைத் தலைவா் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.