கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
காவல் துறை பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சி
மழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்க ஏதுவாக சென்னை காவல் துறை சாா்பில் ராஜரத்தினம் மைதானத்தில் ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் துறையின் 290 போலீஸாா் கொண்ட 16 பேரிடா் மீட்புக் குழுவினா், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி முதலுதவி அளிப்பது, வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றுவது, சாலைகளில் ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவது, கயிறு நுட்பங்களைப் பயன்படுத்தி உயரமான கட்டடங்களில் சிக்கித் தவிப்பவா்களை மீட்பது, பேரிடா் காலங்களில் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் செய்து காட்டினா்.
மேலும், தாழ்வான மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து மக்களை ரப்பா் படகுகளைப் பயன்படுத்தி வெளியேற்றுவது குறித்தும் ஒத்திகை பாா்த்தனா்.
நிகழ்ச்சியில் பெருநகர தலைமையிட கூடுதல் ஆணையா் விஜயேந்திர பிதாரி, ஆயுதப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.