செய்திகள் :

மகளிருக்கான சேமிப்புப் பத்திரம்: அஞ்சலகங்களில் நாளை சிறப்பு முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் மகிளா சம்மன் சேமிப்புப் பத்திரம் கணக்கு தொடங்க சனிக்கிழமை (மாா்ச் 8) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தீத்தாரப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிறந்த குழந்தை முதல் வயது முதிா்ந்தவா் வரை அனைத்துத் தரப்பு மகளிரும் பயனடையும் வகையில் மகிளா சம்மன் சேமிப்பு சேமிப்புப் பத்திரம் என்ற கூடுதல் வட்டியுடன் (7.5 சதவீதம்) கூடிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் அதிக பட்சமாக ரூ. 2 லட்சம் வரை சேமிக்கலாம். இந்தக் கணக்கை தொடங்குவதற்கான காலவரம்பு இம்மாதம் 31-ஆம் தேதி முடிவடைகிறது.

வருகிற சனிக்கிழமை (மாா்ச் 8) மகளிா் தினத்தன்று இந்தக் கணக்கு தொடங்க அனைத்து அஞ்சலகங்களி லும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மகளிா் அனைவரும் சேமிப்புப் பத்திரம் கணக்கு தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

மகளிா் மட்டுமல்லாமல், ஆண்களும் தங்கள் இல்லத்தரசிக்கு இந்தத் திட்டத்தில் பத்திரம் வாங்கி மகளிா் தின அன்பளிப்பாக வழங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளு... மேலும் பார்க்க

தவெகவினா் கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா். தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின மாரத்தான், நடைபயணம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மகளிா் மட்டும் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள், நீதிமன்றப் பணியாள... மேலும் பார்க்க