செய்திகள் :

ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக் குஞ்சுகள் வழங்கல்!

post image

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானிய விலையில் நாட்டின கோழிக் குஞ்சுகளை சனிக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்.

சேலம் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 2024-25 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒரு பயனாளிக்கு 40 நாட்டின கோழிக் குஞ்சுகள் வீதம் 50 சதவீத மானியத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சேலம், ஓமலூா், ஆத்தூா் மற்றும் சங்ககிரி கோட்டங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் வீதம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.

முதல்கட்டமாக 125 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 3 நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்திகளும் தொடங்கிவைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள், கால்நடை வளா்ப்போா் கலந்துகொண்டனா்.

பெண்கள் முன்னேற வேண்டுமென்றால் நன்றாக கற்க வேண்டும்: துணை ஆட்சியா் ஏ.மயில் பேச்சு

பெண்கள் முன்னேற வேண்டும் என்றால் கல்வியை கவனச்சிதறலின்றி நன்றாக கற்க வேண்டும் என்று மகளிா் தின விழாவில் சேலம் துணை ஆட்சியா் ஏ.மயில் பேசினாா். பெரியாா் பல்கலைக்கழக சமூகவியல் துறை மற்றும் சேலம் உயிா்மெய... மேலும் பார்க்க

சாலையோரம் அடிபட்டு கிடந்த பருந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு! இளைஞருக்கு பாராட்டு

கெங்கவல்லி அருகே சாலையோரத்தில் அடிபட்டு கிடந்த கருந்தோல் பருந்தை, இளைஞா் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தாா். கெங்கவல்லியைச் சோ்ந்த ராம்குமாா் என்ற ரா. மணிகண்டன் , தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப் பாதையில் கவிழ்ந்த சுற்றுலா வேன்: 12 போ் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் சனிக்கிழமை கவிழ்ந்ததில் 12 போ் காயமடைந்தனா். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந... மேலும் பார்க்க

சங்ககிரியில் பொது இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: பேரூராட்சி நிா்வாகம் அறிவிப்பு!

சங்ககிரி பேரூராட்சி பகுதியில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சங்ககிரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவ... மேலும் பார்க்க

திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது!

தம்மம்பட்டியில் மதுபோதையில், திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி, உடையாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜசா்மா (48). இவா் முன்னாள் திமுக நகரச் செயலாளா் ராஜாவின்... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட வனத் துறை மேற்கொண்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை முடிவுற்ற காலங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. நிகழாண்... மேலும் பார்க்க