லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் இந்தியா தற்போது 2-1 என முன்னிலையில் இருக்க, அந்த அணிகள் மோதும் 4-ஆவது ஆட்டம் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இம்மாதம் 16, 19, 22 ஆகிய தேதிகளில் இவ்விரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. அதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக டி20 தொடரின் கடைசி 3 ஆட்டங்களில் இருந்து விலகியிருக்கும் கேப்டன் நேட் சிவர் பிரன்ட், ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். காயத்திலிருந்து மீண்டு அந்தத் தொடரில் அவரும் விளையாடவுள்ளதாகத் தெரிகிறது.
அணி விவரம்: நேட் சிவர் பிரன்ட் (கேப்டன்), எம் அர்லாட், சோஃபியா டங்க்ளி, எம்மா லேம்ப், டேமி பியூமன்ட் (வி.கீ.), எமி ஜோன்ஸ், மாயா புச்சியர், ஆலிஸ் கேப்சி, கேட் கிராஸ், ஆலிஸ் டேவிட்சன், சார்லி டீன், சோஃபி எக்லஸ்டன், லாரென் ஃபைலர், லின்சே ஸ்மித், லாரென் பெல்.