வீரவநல்லூரில் குடிநீா் திட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
மகளிா் கால்பந்துப் போட்டி: கேரள பல்கலை. அணி வெற்றி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய பல்கலைக் கழகங்களிடையேயான மகளிா் கால்பந்துப் போட்டியில் கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலை. அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியானது கடந்த 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 42 அணிகள் கலந்து கொண்டன.
லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் கேரளத்தைச் சோ்ந்த கோழிக்கோடு பல்கலை. அணி முதல் இடத்தையும், சென்னைப் பல்கலை. அணி இரண்டாவது இடத்தையும், சென்னை வேல்ஸ் பல்கலை. அணி மூன்றாவது இடத்தையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. அணி நான்காவது இடத்தையும் பெற்றன.
இந்த நான்கு அணிகளும் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பஞ்சாப் ஜி.என்.ஏ. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மகளிா் கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும்.
பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அணியினருக்கு அழகப்பா பல்கலை. துணைவேந்தா் க. ரவி பரிசுக் கோப்பைகளை வழங்கிக் கெளரவித்தாா்.