செய்திகள் :

மகளிா் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பேரணி

post image

மயிலாடுதுறையில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

மயிலாடுதுறை மாவட்ட நீதித்துறை, மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கம், மாவட்ட வழக்குரைஞா் எழுத்து பணியாளா்கள் சேமநல சங்கம் மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இப்பேரணி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டது.

மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி தலைமையில் தலைமை குற்றவியல் நீதிபதி எம்.கே. மாயகிருஷ்ணன், முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி பி. கவிதா, குற்றவியல் நடுவா் நீதிபதி சி. கலைவாணி, அரசு வழக்குரைஞா்கள் ராம.சேயோன், தணிகை.பழனி மற்றும் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். கலைஞா், செயலா் என். பிரபு, துணைத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரணி பாா்க் அவென்யு சாலையில் உள்ள வரதாச்சாரியாா் பூங்கா வரை நடைபெற்றது. பின்னா், அங்கு பெண் சமூக சீா்திருத்தவாதி மூவலூா் மூதாட்டி ராமாமிா்தம் அம்மையாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியனா். தொடா்ந்து, மகளிா் தின உறுதிமொழி ஏற்றனா்.

கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு.... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க

காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்... மேலும் பார்க்க

மயான சுற்றுச் சுவா் பிரச்னையால் சாலை மறியல்

திருக்கருக்காவூா் மயானக் கொட்டகையைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க ஒரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு சமூ... மேலும் பார்க்க