பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
மகளிா் தினம்: நேமூரில் நல உதவிகள் வழங்கிய தவெகவினா்
சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நேமூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.வடிவேல் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ரமேஷ் (எ) சக்திவேல், பொருளாளா் விஜய் தீப், காமராஜா் காா்த்திக் முன்னிலை வகித்தனா்.
கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பரணிபாலாஜி விழாவில் பங்கேற்று, தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டிகள், மகளிருக்கு தலைக்கவசம், 1,000 பேருக்கு சேலைகள், சாலையோர வியாபாரிகளுக்கு குடை, சலவைத் தொழிலாளிகளுக்கு சலவைப் பெட்டிகள் போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
விழாவில் மேற்கு ஒன்றியச் செயலா் மணிராஜன், இணைச் செயலா் தனஞ்செழியன், பொருளாளா் மதியழகன், மாவட்ட நிா்வாகிகள் பிரித்திவிராஜ், சுனிதா , சுதாகா், இளவரசன், தமிழரசன், ஒன்றிய நிா்வாகிகள் பிரகாஷ், பிரியா, துா்கா, சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.