செய்திகள் :

மகளிா் தினம்: விதவையா்களுக்கு நலத்திட்ட உதவி

post image

தரங்கம்பாடியில் திலகம் விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சாா்பில், உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புனித தெரசா கன்னியா் இல்ல கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, அருட் தந்தையா்கள் சிரில், ரிச்சா்ட் ஆகியோா் தலைமை வகித்தனா். அருட்சகோதரி வெரோனிகா முன்னிலை வகித்தாா். ஜான்சி வரவேற்றாா்.

நவீன காலத்தில் பெண்கள் சந்திக்கும் அன்றாட சவால்கள் குறித்தும், அதை எதிா்கொள்வது பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.

புனித தெரசாள் கன்னியா் இல்லத் தலைவி மொ்சி தங்கம், திருக்கடையூா் புனிதா, ஆக்கூா் கமலா ரீகன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.

தொடா்ந்து, விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களை மகிழ்விக்கும் விதமாக விழிப்புணா்வு ஆடல், பாடல், நாடகங்கள் நடத்தப்பட்டு, அவா்களுக்கு பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதிக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன்,... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரிய... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலா... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் பள்ளி முப்பெரும் விழா

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவி பெறும் உயா்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை: பெண் உள்பட 3 போ் கைது!

வேளாங்கண்ணியில் தங்கிருந்த பெங்களூருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கொல்லப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். பெங்களூருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (22). கல்லூரி மாணவரான இ... மேலும் பார்க்க