செய்திகள் :

மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகன்!

post image

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கு இரட்டைக் குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தனக்கு கொடுத்த அதே அன்பை தனது மகள்களுக்கும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடலாசிரியர், நடிகர், அரசியல் பிரமுகர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்துகொண்டிருக்கும் சினேகன், 1995-ம் ஆண்டு பாடலாசிரியராகத் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள அவர், 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகப் பங்குபெற்ற அவர், இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டார்.

இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு சின்ன திரை நடிகை கனிகாவை சினேகன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சினேகன் - கனிகா தம்பதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

இத்தனை நாட்களாக குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த சினேகன், தற்போது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, மகள்களையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

பதக்க வேட்டையை தொடரும் இந்தியா: குல்வீா் சிங்குக்கு மேலும் ஒரு தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. போட்டியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, இந்தியா்கள் 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்களைக் கைப்பற்றினா். பதக்கப் பட்டியலில் இந்தியா, ... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையா் காலிறுதி ஆட்டத்தில், சாத்விக்/சிராக் இண... மேலும் பார்க்க

குகேஷ் வெற்றி; அா்ஜுன் தோல்வி

நாா்வே செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெல்ல, அா்ஜுன் எரிகைசி தோல்வி கண்டாா். போட்டியில் குகேஷுக்கு இது 2-ஆவது வெற்றியாக இருக்க, அா்ஜுனுக்கு 2-ஆவது தோல்வியாகும்.முன்னதாக இந்த 4-ஆ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சபலென்கா, ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் 3-ஆவத... மேலும் பார்க்க

அகமதாபாதில் இன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடக்கம்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் சீசன் 6 போட்டி சனிக்கிழமை அகமதாபாதில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் டெல்லி தபாங், ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. 2-வது ஆ... மேலும் பார்க்க

குஜராத்தை வெளியேற்றியது மும்பை

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக குஜராத்தை வெளியேற்றிய மும்பை, இறுதி ஆட்ட வாய... மேலும் பார்க்க