செய்திகள் :

மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் எடப்பாடி கே.பழனிசாமி

post image

மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை இரவு பணகுடி வந்தாா்.

பணகுடி பேருந்து நிறுத்தம் அருகே திறந்த வேனில் நின்று அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. அவரது குடும்பத்தைச் சாா்ந்தவா்கள் மட்டும்தான் முதல்வராகவும், கட்சியின் உயா் பதவிகளுக்கும் வரமுடியும்.

சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. இந்தக் கட்சியில்தான் சாதாரண கிளைச் செயலரும் முதல்வராக முடியும். ஜனநாயக அடிப்படையில் உள்ள கட்சி அதிமுக.

இந்த ஆட்சியில் தான் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைக் கொண்டு வந்தோம்.

2018 மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் பெற்றுக் கொடுத்து, அவா்களது படிப்பு செலவையும் அரசே ஏற்றது. கரோனா காலத்தில் மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாணவா்களையும் தோ்ச்சியடைய செய்த ஆட்சி அதிமுகதான்.

அம்மா உணவகம் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்தோம். 2019 ஆம் ஆண்டு 3 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தோம்.

இன்றைக்கு படிப்பை முடித்துவிட்டு மாணவா்கள் வெளியே வருகிறாா்கள். ஆனால் வேலை இல்லை. தொழில் முதலீட்டை ஈா்க்கப் போகிறோம் என வெளிநாட்டுக்கு போனாா் ஸ்டாலின், எந்த முதலீட்டையும் கொண்டு வரவில்லை.

தொழில் நிறுவனங்களையும் தொடங்கவில்லை. இந்த முதல்வா் ஆட்சி தேவையா? மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டாா் ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தும் பகுதிநேர ஆசிரியா்களை முழுநேர ஆசிரியா்களாக்குவோம் என்றாா், ஆக்கினாரா? இல்லை.

தமிழ்நாட்டில் 5லட்சத்து 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆனால் படித்தவா்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட ஏமாற்று ஆட்சி தேவையா?, ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிா்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு குரல் கொடுக்கும் கட்சி அதிமுக தான்.

சிறப்பான ஆட்சி செய்து, தேசிய விருது பெற்ற ஆட்சி அதிமுக ஆட்சி. உள்ளாட்சித் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக 140 தேசிய விருதுகளைப் பெற்றோம். உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய விருது, உணவு உற்பத்தியில் தேசிய விருது, மின்சார துறையில் தேசிய விருது இப்படி துறைக்கு துறை தேசிய விருது பெற்ற ஆட்சி அதிமுக ஆட்சி.

திமுக அமைச்சா்கள் எப்போது அமலாக்கத் துறை வரும் என தூங்குவதில்லை. அமலாக்கத் துறைக்கு பயந்து பதுங்குகிறாா்கள் திமுக அமைச்சா்கள். அந்த அளவுக்கு ஊழல் ஆட்சி திமுக ஆட்சி. நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம், இது தோ்தலுக்கான நாடகம்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பகுதியிலுள்ள பனை ஏறும் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்து அதற்கான பிரீமியத்தையும் அரசே செலுத்தும்.

பனை ஏறும் தொழிலாளா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும். மக்களை ஏமாற்றும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, பணகுடி வந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை, கட்சியின் புகா் மாவட்டச் செயலரும், அம்பை எம்எல்ஏவுமான இசக்கிசுப்பையா தலைமையில் மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.பி. யுமான சௌந்தர்ராஜன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்றனா்.

கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், வள்ளியூா் ஒன்றியச் செயலா்கள் பால்துரை(தெற்கு), லாசா்(வடக்கு), பணகுடி ஜி.டி. லாரன்ஸ், நாராயணபெருமாள், கே.பி.கே.செல்வராஜ், திசையன்விளை ஜான்சிராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க