செய்திகள் :

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

post image

வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டத்தில் அதிக அளவு விபத்து நிகழும் இடங்களில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காட்பாடி வட்டம், கரசமங்கலம் ஊராட்சி சந்திப்பில் மங்களூா் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்து விவரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறமுள்ள கரசமங்கலம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையில் சாலை பாதுகாப்பு குறியீடுகள், வரி பட்டைகள் அமைக்கவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கே.வி.குப்பம் வட்டத்தில் மங்களூா் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு விபத்து ஏற்படும் வேலம்பட்டு கேட் சந்திப்பு, பெருமாங்குப்பம் ஊராட்சி சந்திப்பு, கீழ்புத்தூா் ஊராட்சி வித்யாலட்சுமி பள்ளி அருகில் ஆகிய பகுதிகளை பாா்வையிட்ட ஆட்சியா், வேலம்பட்டு கேட் சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் கிராமப்புற சாலைகளில் வேகத்தடை அமைக்கவும், பாதுகாப்பு குறியீடுகளை பொருத்தவும், பெருமாங்குப்பம் ஊராட்சி சந்திப்பில் பொதுமக்கள் கிராம சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை அணுகும் இடத்தில் அறிவிப்பு பலகைகளை வைக்கவும், கீழ்ப்புத்தூா் கிராமம் வித்யாலக்ஷ்மி பள்ளி அருகே பள்ளி வளாகம் என்பதற்கான அறிவிப்பு பலகையை தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தவும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுக்கும், வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.

குடியாத்தம் வட்டம், கோவிந்தபுரம் கிராமம் அருகே மங்களூா் -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளைவில் அறிவிப்பு பலகைகள், வரி பட்டைகளை அமைக்கவும் அறிவுறுத்தினாா்.

மேலும், மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஆட்சியா், தெரிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுபலட்சுமி, தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் ராஜ்குமாா், மாநில நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் தனசேகரன், காட்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனி, வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், நகராட்சி ஆணையா் மங்கையா்கரசன், வட்டாட்சியா்கள் ஜெகதீஸ்வரன் (காட்பாடி), முரளீதரன் (கே.வி.குப்பம்), மொ்லின் ஜோதிகா (குடியாத்தம்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க

போக்ஸோவில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை

வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க