அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கு...
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்தது என்று ஷில்லாங்கில் உள்ள மாகாண நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த நில அதிர்வானது அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மகாணாத்தின் பிற பகுதிகளில் உணரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்பின்னர், மணிப்பூரில் பிற்பகல் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டத்தில் 66 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் காணப்பட்டன.