மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் செவ்வாய்க்கிழமை இயங்காது என மாவட்ட ஆட்சியா் மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வள்ளலாா் நினைவுநாளையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், மதுபானக் கூடங்கள் இணைந்த மற்றும் மதுபானக் கூடங்கள் இல்லாமல் இயங்கும் அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், மதுபானம் அருந்தும் கூடங்கள் ஆகியவை செவ்வாய்க்கிழமை (பிப்.11) மூடப்பட வேண்டும்.
இந்த ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடா்புடைய மதுபானக்கடைகளின் மேற்பாா்வையாளா்கள், உரிமதாரா்கள் ஆகியோா் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.