திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழப்பு
துறையூா் அருகே மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
துறையூா் அருகேயுள்ள சொரத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரா. மகாலிங்கம் (70). அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் கணபதி (45). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் பேசிக் கொண்டிருந்தபோது அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கம்பால் மகாலிங்கத்தின் தலையில் கணபதி தாக்கினாராம்.
காயமடைந்த மகாலிங்கம் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை மகாலிங்கம் உயிரிழந்தாா்.
துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.