மதுப்புட்டிகள் பதுக்கியவா் மீது வழக்கு
போடி அருகே வியாழக்கிழமை மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகேயுள்ள விசுவாசபுரம் பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். விசுவாசபுரம் மயானப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த முதியவரை விசாரித்தனா். அவா் சட்டவிரோதமாக 12 மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் விசுவாசபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பழனிவேல் (66) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.