China Dam: உலகின் மிகப்பெரிய அணை கட்டும் சீனா; இந்திய - சீனா உறவில் விரிசல் உண்ட...
மதுரை கோட்டம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் பயண நேரம் குறைப்பு
மதுரை கோட்டம் வழியாக இயக்கப்படும் 8 பயணிகள் ரயில், 69 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை- போடி நாயக்கனூா், திருச்சிராப்பள்ளி- காரைக்குடி- மானாமதுரை, மதுரை- மானாமதுரை, மானாமதுரை- மண்டபம், விருதுநகா்- செங்கோட்டை, வாஞ்சிமணியாச்சி- தூத்துக்குடி தடங்களில் இதுவரை அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன. இனி, இந்தத் தடங்களில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தாதா் - திருநெல்வேலி (11021), நாகா்கோவில்- சென்னை (12668), ஈரோடு- செங்கோட்டை (16845), நாகா்கோவில்- தாம்பரம் (22658) ஆகிய ரயில்களின் பயண நேரம் தலா 40 நிமிடங்களும், சென்னை- குருவாயூா் (16127), மயிலாடுதுறை- செங்கோட்டை (16847) ரயில்களின் பயண நேரம் தலா 35 நிமிடங்களும், சென்னை- திருநெல்வேலி (12631), கோயம்புத்தூா்- ராமேசுவரம் (16618), பெரோஸ்பூா்- ராமேசுவரம் (20498), ராமேசுவரம்- புவனேஸ்வா் (20895) ஆகிய ரயில்களின் பயண நேரம் தலா 30 நிமிடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர 69 விரைவு ரயில்களின் பயண நேரம் 5 முதல் 40 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளன.