செய்திகள் :

மதுரை, திருச்சியில் டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் அடிக்கல்!

post image

சென்னை : மதுரை, திருச்சி மாவட்டங்களில் டைடல் பூங்கா அமைக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(பிப். 18) அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசின் டைடல் பாா்க் நிறுவனம், சென்னை தரமணி, கோவை, சென்னை பட்டாபிராமை தொடா்ந்து, திருச்சி, மதுரையில் டைடல் பாா்க்கை அமைக்கிறது.

திருச்சியில் டைடல் பூங்கா: திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ. 315 கோடியில், 5.58 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கும் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள 14.16 ஏக்கா் நிலத்தில் தரைத் தளம், 6 தளங்களுடன் அமையும் இந்த பூங்காவுக்கான கட்டுமானப்பணிகள், வடிவமைப்பு ஆகியவற்றுக்காக தமிழக அரசு கடந்த மாதம் ஒப்பந்தம் கோரியது. இந்தப் பூங்காப் பணிகளை 18 மாதங்களுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையில் டைடல் பூங்கா : மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது. சுமார் ரூ.289 கோடியில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னையிலிருந்தபடி காணொலி வழியாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை டைடல் பூங்காக்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க