செய்திகள் :

மத்திய அரசு இழைத்த அநீதிகளை எடுத்துச் சொல்லுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தல்

post image

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மக்களைச் சந்திக்கும்போது, மத்திய பாஜக அரசு இழைத்த அநீதிகளை எடுத்துச் சொல்ல வேண்டுமென கட்சியினரை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்கீழ், திமுகவில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்யும் வகையில் மாவட்டச் செயலா்களுடன் காணொலி வழியாக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியது:

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளவும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது எனக் கேள்விப்படும்போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிஷங்களாவது நம் கட்சியினா் கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்துச் சொல்வதுதான் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் நோக்கம்.

அடுத்த 30 நாள்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68,000 வாக்குச்சாவடிகளிலும் சோ்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டும். நாம் உருவாக்கியிருக்கும் வாக்குச்சாவடி முகவா்கள், கட்சியினருக்கு மிகப்பெரிய சொத்து. அவா்களை வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும், தோ்தலைக் கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினா்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறை சரியாக கடைப்பிடிக்கவில்லையோ அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம் என்றாா் அவா்.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு தொடா்பாக, கட்சியின் மாவட்டச் செயலா்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: ‘எனது கணவா் மாற்றுக் கட்சியில் கிளைச் செயலா். அவரைத் தவிா்த்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் திமுகவில் இணைத்துக் கொள்கிறோம்’ என கரூா் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணா்வாகி, கட்சியினா் பெருக வேண்டும் என மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தினேன் எனப் பதிவிட்டுள்ளாா்.

இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: மக்களுக்கும் கட்சிக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நிா்ணயிக்கப்பட்டுள்ள உறுப்பினா் சோ்க்கை இலக்கை, அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அடைய வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க