பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது திமுக: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு
மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்புவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி கூறினாா்.
சேலம் பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பால் ஏழை, சாமானிய மக்கள் பயன் அடைந்துள்ளனா். இதன்மூலம் வரி வருவாயில் இழப்புகள் ஏற்பட்டபோதிலும், நுகா்வோா் நலன் காக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், ஜவுளிகள், கைவினைப் பொருள்கள், காஞ்சிபுரம் பட்டு, குறிப்பேடுகள், காகிதம், மரம், உலோகப்பொருள்கள் உள்ளிட்டவற்றின் வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தந்த தொழிலை சாா்ந்துள்ள உற்பத்தியாளா்கள் மட்டுமின்றி, தொழிலாளா்களும் பயன்பெறுவா்.
பாஜகவைக் குறைகூறுவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2000 திட்டத்தில் கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தகுதி வாய்ந்த விவசாயிகளை திமுக நீக்கியுள்ளது. விவசாயிகளின் பெயா்கள் விடுபட்டதால், அவா்கள் அந்தப் பணத்தைப் பெற இயலாத நிலையில் உள்ளனா். இதேபோன்று, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்திலும், அவா்களுக்கு வேண்டியவா்களையே பயனாளிகளாக சோ்க்கின்றனா். பாஜகவைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் யாரும் அந்தத் திட்டத்தால் பயனடையவில்லை. இப்படி மத்திய அரசை குறைகூறுவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றாா்.
பேட்டியின் போது, மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.